வெளிமாநில தொழிலாளர்களின் போராட்டம் துரதிர்ஷ்டவசமானது: மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே


வெளிமாநில  தொழிலாளர்களின்  போராட்டம் துரதிர்ஷ்டவசமானது: மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 14 April 2020 4:35 PM GMT (Updated: 14 April 2020 4:35 PM GMT)

வெளிமாநில தொழிலாளர்களின் போராட்டம் துரதிர்ஷ்டவசமானது என்று மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை பந்த்ரா ரெயில் நிலையம் முன்பு திரண்ட ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த வெளிமாநில தொழிளர்கள், தங்களை சொந்த ஊருக்கு திரும்ப அனுமதி அளிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில்,  தொழிலாளர்களின் இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 இந்த சூழ்நிலையில்  மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே தொலைக்காட்சியின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;- பந்த்ரா ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பின் ரெயில்சேவைகள் இயங்கும் என நினைத்து வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த கிராமத்திற்கு செல்வதற்காக ரயில் நிலையம் வந்திருக்கலாம்.  வதந்தி பரப்புவர்கள், ஏழை தொழிலாளர்களுடன் உணர்வுகளுடன் விளையாட வேண்டும். வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக கடும் எச்சரிக்கை விடுக்கிறேன்.

ஊரடங்கு என்பது உங்களை அடைத்து வைப்பது போன்றது இல்லை. நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். மத்திய அரசிடம் நான் பேசினேன்.நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.  யாரும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உரிய பாதுகாப்பை அளிப்பது எங்களின் கடமை. இவ்வாறு உத்தவ் கூறினார்.

Next Story