மராட்டியத்தில் கொரோனா பாதித்த 70 %பேருக்கு அறிகுறிகள் இல்லை : முதல் மந்திரி உத்தவ் தாக்கரே


மராட்டியத்தில் கொரோனா பாதித்த   70 %பேருக்கு அறிகுறிகள் இல்லை : முதல் மந்திரி உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 19 April 2020 12:19 PM GMT (Updated: 19 April 2020 2:38 PM GMT)

மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்களில் 70 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்று அம்மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மும்பை,

கொரோனா வைரஸ் பாதிப்பில் நாட்டிலேயே மராட்டியம் தான் முதலிடத்தில் உள்ளது. மராட்டியத்தில் இந்த தொற்று நோய்க்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி, 3651 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது  மாநில மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், மராட்டியத்தில்  கொரோனா பாதிக்கப்பட்ட 70 முதல் 75 சதவீதம் பேருக்கு வைரஸ் தொற்று அறிகுறிகள் இல்லை என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.  காணொலி வாயிலாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த உத்தவ் தாக்கரே கூறியதாவது: - மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70-75% பேருக்கு  அறிகுறிகள் இல்லை. சுமார் 60,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட சூழலில் 3,600 பரிசோதனைகள் நேர்மறையாக உறுதி செய்யப்பட்டுள்ளன. 300க்கும் மேற்பட்டோர்  கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது 52 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

மனநல பிரச்னைகளை எதிர்கொள்பவர்களுக்கு கட்டணமில்லா அவசர தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மனநல ஆலோசனை பெற விரும்புவோர் 1800 120 820050 என்ற எண்ணை அழைக்கவும். மராட்டியத்தில் இருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று உறுதியளிக்கிறேன்” என்றார். 


Next Story