கொரோனா வைரசுக்கு எதிரான கண்ணுக்கு தெரியாத யுத்தம் - ராஜ் நாத் சிங்


கொரோனா வைரசுக்கு எதிரான கண்ணுக்கு தெரியாத யுத்தம் - ராஜ் நாத் சிங்
x
தினத்தந்தி 19 April 2020 2:41 PM GMT (Updated: 19 April 2020 2:41 PM GMT)

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் நம் வாழ்நாளில் கண்ணுக்கு தெரியாத யுத்தம் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இந்தியாவை பாதுகாக்கவும், நாட்டை சமூக விரோத சக்திகளிடமிருந்து பாதுகாக்கவும் இந்திய ராணுவம் முழுமையாக தயாராக இருப்பதாகவும், கொரோனாவை ஒழிக்க அனைத்து அரசு துறைகளும் ஒன்றிணைந்து போர்க்கால அடிப்படையில் செயல்பட்டுவருவதாகவும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

மேலும் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் நம் வாழ்நாளில் மிகப்பெரிய கண்ணுக்கு தெரியாத யுத்தமாகும். மக்களின் ஆதரவோடு இந்தியா இந்த யுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. மனிதகுலத்திற்கு எதிரான யுத்தம், தேசத்தின் உடல்நலம் மற்றும் பொருளாதார பாதுகாப்பில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகிறது. கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் ஆயுதப்படைகள் நமது தேசத்திற்கு உதவுகின்றன என்று அவர் கூறினார்

மேலும் ராணுவத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, படைகளை ஓரிடத்தில் குவிப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான பாதுகாப்புக்காக பிரதமர் அலுவலகம் மற்றும் சுகாதார அமைச்சகம் வழங்கிய அறிவுறுத்தல்களை இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை உறுதியாக பின்பற்றி வருகின்றன என்றும் அவர் கூறினார். 

Next Story