மராட்டியத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது


மராட்டியத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 19 April 2020 4:13 PM GMT (Updated: 2020-04-19T21:43:27+05:30)

மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,200 ஆக அதிகரித்துள்ளது.

மும்பை,

கண்ணுக்கு தெரியாத ஆட்கொல்லி கொரோனா வைரஸ் மராட்டியத்தை ஆட்டி படைத்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மராட்டியம் தொடர்ந்து முதலிடத்திலிருந்து வருகிறது. நேற்று வரை இந்த உயிர்க்கொல்லி நோயால் நேற்று  328 பேர் பாதிக்கப்பட்டனர்.  

இந்த நிலையில், மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,200 ஆக உயர்ந்துள்ளது.இன்று ஒருநாளில் மட்டும் 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  ஒட்டுமொத்தமாக மராட்டியத்தில்  கொரோனா  பாதிப்பால் 223 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், 507- பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 

Next Story