மத்திய பிரதேசத்தில் இன்று அமைச்சரவை விரிவாக்கம்


மத்திய பிரதேசத்தில் இன்று அமைச்சரவை விரிவாக்கம்
x
தினத்தந்தி 20 April 2020 6:41 PM GMT (Updated: 2020-04-21T00:11:09+05:30)

மத்திய பிரதேசத்தில் இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

போபால்,

மத்திய பிரதேச முதல்-மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் மார்ச் 23-ம் தேதி இரவு பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து சட்டசபையில் அவர் பெரும்பான்மையை நிருபித்தார்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக அந்த மாநிலத்தில் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மட்டுமே அனைத்து பணிகளையும் கவனித்து வந்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான கமல்நாத், “கொரோனா பாதிப்பு மத்திய பிரதேசத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால் மாநில அரசு முழுமையாக செயல்படவில்லை. மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் கூட இல்லை. கொரோனாவை எதிர்த்து பணியாற்றுவதில் சுணக்கம் நீடிக்கிறது. அவசரப்பட்டு காங்கிரஸ் அரசை பா.ஜனதா அரசு கவிழ்ந்ததால் தான் இந்த சூழல் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார். இதற்கு மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story