உள்துறை அமைச்சகத்தின் கண்டிப்புக்கு பிறகு மத்தியக்குழுவுக்கு மே.வங்க அரசு அனுமதி


உள்துறை அமைச்சகத்தின் கண்டிப்புக்கு பிறகு மத்தியக்குழுவுக்கு மே.வங்க அரசு அனுமதி
x
தினத்தந்தி 21 April 2020 4:23 PM GMT (Updated: 21 April 2020 4:23 PM GMT)

உள்துறை அமைச்சகத்தின் கண்டிப்புக்கு பிறகு மத்தியக்குழுவுக்கு மேற்கு வங்காள அரசு அனுமதி அளித்தது.

கொல்கத்தா,

இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், சில பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், மராட்டிய மாநிலம் மும்பை, புனே, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா, ஹவுரா, கிழக்கு மேதினிபூர், 24 வடக்கு பர்கானா, டார்ஜிலிங், கலிம்போங், ஜல்பைகுரி ஆகிய பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. எனவே, இந்த நான்கு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் விதம் குறித்து, நிலைமையை நேரில் ஆய்வு செய்ய அமைச்சகங்களுக்கு இடையேயான 6 குழுக்களை மத்திய அரசு அமைத்து இருக்கிறது.

இந்த குழுக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துவது, சமூக விலகல், அத்தியாவசிய பொருட்கள் சப்ளையை உறுதி செய்வது, சுகாதார கட்டமைப்புகள், சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பு, தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களின் நிலைமை தொடர்பான சிபாரிசுகளை மத்திய அரசுக்கு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.ன் ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்தார். 

மேலும்,  கொல்கத்தா சென்ற மத்தியக் குழுவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்தியக் குழு உறுப்பினர்அபூர்வா சந்திரா,  பிற மாநிலங்களுக்குச் சென்ற குழுக்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறது. ஆனால், மேற்கு வங்காளத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை” என்றார்.  

இதையடுத்து, மத்திய குழுவுக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால்  நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்கு வங்காள அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, சில மணி நேர காத்திருப்புக்கு பிறகு மத்தியக்குழுவுக்கு மேற்கு வங்க அரசு அனுமதி அளித்தது.எல்லை பாதுகாப்பு படை மற்றும் மாநில போலீசார் பாதுகாப்புடன் மத்தியக்குழுவினர் ஊரடங்கு நடைமுறைகளை ஆய்வு செய்தனர். 


Next Story