தேசிய செய்திகள்

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியல்: மீண்டும் முதலிடத்தை பிடித்தார் முகேஷ் அம்பானி + "||" + Mukesh Ambani’s Wealth Surges After Facebook Deal, Topples Jack Ma To Become Asia’s Richest Person

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியல்: மீண்டும் முதலிடத்தை பிடித்தார் முகேஷ் அம்பானி

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியல்: மீண்டும் முதலிடத்தை பிடித்தார் முகேஷ் அம்பானி
ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
மும்பை

பிரபல சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக், முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ நிறுவனத்தில் 9.9  சதவீத பங்குகளை 5.7 பில்லியன் டாலர் தொகைக்கு வாங்கியது. இதன் மூலம், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு  49 பில்லியன் டாலர் வரை உயரந்துள்ளது. 

இதனால், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகித்த ஜேக் மா- வை பின்னுக்குத் தள்ளிய முகேஷ் அம்பானி, மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்தார்.  சீனாவின் அலிபாபா குழும தலைவரான ஜேக் மாவை விட 3.2 பில்லியன் அதிக சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தாராவியில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று
மும்பை தாராவியில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின் சக்தி பூங்கா: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின் சக்தி திட்டத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
3. மும்பை தாராவியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
4. முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் கோடி வீழ்ச்சி - உலக பணக்காரர்கள் வரிசையில் 8 இடங்கள் கீழே இறங்கினார்
கொரோனா வைரசால் பங்கு சந்தையில் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து, முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 400 கோடி வீழ்ச்சி அடைந்தது. அவர் உலக பணக்காரர்கள் வரிசையில் 8 இடங்கள் கீழே இறங்கினார்.