மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 4% அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்


மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 4% அகவிலைப்படி உயர்வு  நிறுத்தம்
x
தினத்தந்தி 23 April 2020 11:27 AM GMT (Updated: 23 April 2020 11:27 AM GMT)

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வு கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வு கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுத்தம் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஜூன் 2021 வரையில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அகவிலைப்படியின்படி தொகை வழங்கப்படும். இந்த நடவடிக்கையால் நடப்பு நிதியாண்டில் ரூ. 37,350 கோடி அளவுக்கு மிச்சம் ஏற்படும். இதே நடவடிக்கையை மாநில அரசுகள் மேற்கொண்டால் அந்த வகைக்காக மட்டும் ரூ. 82,566 கோடி மிச்சமாகும். ஒட்டுமொத்த நடவடிக்கையால் ரூ. 1.20 லட்சம் கோடி மிச்சமாகும்.  அரசின் இந்த நடவடிக்கையால் 48.34 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பாதிப்பு  ஏற்படும்.

Next Story