தேசிய செய்திகள்

ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்: இலவச இணையதள வசதி கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி + "||" + Curfew echo; Supreme Court dismisses case of free internet access

ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்: இலவச இணையதள வசதி கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்:  இலவச இணையதள வசதி கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய நிலையில், இலவச இணையதள வசதி கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
புதுடெல்லி,

டெல்லியை சேர்ந்த வக்கீல் மனோகர் பிரதாப் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரசை கட்டுப்படுத்த மே 3ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால் மக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் செல்போன் மற்றும் ‘வீடியோ கால்’ வழியாக பேசி பொழுதை போக்கி வருகின்றனர்.

எனவே இலவசமாக அளவற்ற தொலைபேசி அழைப்புக்கள், இணையதள வசதி வழங்க மத்திய அரசுக்கும், தொலைபேசி நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்துவதால் மக்களுக்கு மனரீதியாக ஏற்படும் பாதிப்புக்களை களைவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நேற்று நீதிபதிகள் என்.வி.ரமணா, எஸ்.கே.கவுல், பி.ஆர்.கவாய் ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். விசாரணை துவங்கியதும் “ஏன் இது போன்ற மனுக்கள் எல்லாம் தாக்கல் செய்யப்படுகின்றன? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து மனுதாரர் மனுவை வாபஸ் பெற்று கொள்வதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. நிர்பயா வழக்கு; டெல்லி உயர் நீதிமன்றத்தில் முகேஷ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
நிர்பயா வழக்கில் விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் முகேஷ் சிங் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
2. பெரியார் பற்றி பேச்சு: ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு தள்ளுபடி - எழும்பூர் கோர்ட்டு உத்தரவு
பெரியார் பற்றி பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடக்கோரிய மனுவை சென்னை எழும்பூர் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
3. பெரியார் பற்றி சர்ச்சை பேச்சு; நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட பெரியார் பற்றிய சர்ச்சை பேச்சு தொடர்புடைய வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
4. சிறப்பு ஆயுதப்படை ஆயுதங்கள் மாயம்; சி.பி.ஐ. விசாரணை கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
சிறப்பு ஆயுதப்படை ஆயுதங்கள் காணாமல் போன விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரிய மனு கேரள ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
5. அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி ஜாமீன் மனு தள்ளுபடி
இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.