தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல்; டெல்லியில் உள்ள நிதி ஆயோக் கட்டிடத்திற்கு சீல் வைப்பு + "||" + Niti Aayog office sealed after employee tests Covid-19 positive

கொரோனா அச்சுறுத்தல்; டெல்லியில் உள்ள நிதி ஆயோக் கட்டிடத்திற்கு சீல் வைப்பு

கொரோனா அச்சுறுத்தல்; டெல்லியில் உள்ள நிதி ஆயோக் கட்டிடத்திற்கு சீல் வைப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் உள்ள நிதி ஆயோக் கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. எனினும், கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை.  இந்தியாவில்   கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. 

இந்த நிலையில், தேசிய வளர்ச்சிக் கொள்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யும் அமைப்பான நிதி ஆயோக் அமைப்பின் ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நிதி ஆயோக் அலுவலகம் அமைந்துள்ள கட்டிடம் சீல் வைக்கப்பட்டுள்ளது. கிருமி நாசினி தெளித்து கட்டிடத்தை தூய்மை செய்யும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.  

 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இரு ஊழியர்களும் இயக்குநர் மட்டத்திலான அலுவலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று  சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா அச்சுறுத்தல் ‘’வெளியே செல்ல பயமாக உள்ளது” - நடிகை தமன்னா
கொரோனா அச்சுறுத்தலால் வெளியே செல்ல பயமாக உள்ளது என்று நடிகை தமன்னா கூறினார்.
2. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 96 ஆயிரத்தை கடந்தது
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 96 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
3. கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கியுள்ளது- அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்
அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளதாக டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
4. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அமர்வுகள் ஒத்திவைப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அமர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5. கர்நாடகத்தில் இலவச பேருந்து சேவை மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டிப்பு
கர்நாடகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான இலவச பேருந்து சேவையை மேலும் இரண்டு நாள்கள் நீட்டித்து அம்மாநில முதல் மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.