தேசிய செய்திகள்

வங்கி கடன் மோசடி செய்தவர்கள் பட்டியலை பாஜக வெளியிட தயங்கியது ஏன்? ராகுல் காந்தி விளக்கம் + "||" + This Is Why Truth Was Hidden": Rahul Gandhi On RBI's Defaulters List

வங்கி கடன் மோசடி செய்தவர்கள் பட்டியலை பாஜக வெளியிட தயங்கியது ஏன்? ராகுல் காந்தி விளக்கம்

வங்கி கடன் மோசடி செய்தவர்கள் பட்டியலை பாஜக வெளியிட தயங்கியது ஏன்? ராகுல் காந்தி விளக்கம்
வங்கி கடன் மோசடி செய்தவர்கள் பட்டியலில் பாஜகவின் நண்பர்கள் இடம் பெற்றிருப்பதாக ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
புதுடெல்லி,

வங்கியில் மோசடி செய்தவர்களில் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் 50 பேரின் விவரங்களை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டது.  சமூக ஆர்வலர் சாகத் கோகலே என்பவர் , தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக இந்தத் தகவல்களை ரிசர்வ் வங்கியிடம் கோரினார். இதையடுத்து ரிசர்வ் வங்கி தகவல்களை வெளியிட்டது. இதில் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி உள்ளிட்டோரது பெயர்களும், அவர்களது நிறுவனங்களும் கடன் விவரமும் இடம்பெற்றுள்ளன.

இந்த விவகாரத்தை வைத்து மத்திய அரசை கடுமையாக சாடியுள்ள ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- “  
நான் நாடாளுமன்றத்தில் மிக எளிதான கேள்வியைத் தான் கேட்டேன். வங்கிக் கடன் மோசடி அதிகம் செய்த முதல் 50 பேரின் பட்டியலை வெளிளியிடுமாறு கூறினேன். 

இதற்கு நிதியமைச்சர் பதில் ஏதும் அளிக்கவில்லை. தற்போது ரிசர்வ் வங்கி விவரங்களை வெளியிட்டு விட்டது. அந்த பட்டியலில் நீரவ் மோடி, மெகுல் சோக்சி உள்பட பாஜகவின் நண்பர்கள் இடம்பெற்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் இதனால்தான் இந்த விவகாரத்தில் உண்மை மறைக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தண்டையார்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தண்டையார்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. பா. ஜனதா சொல்வது மேக் இன் இந்தியா, ஆனா வாங்குவது சீனாவில்- ராகுல்காந்தி குற்றச்சாட்டு
சொல்வது மேக் இன் இந்தியா, ஆனால் வாங்கிவது சீனாவில் இருந்து என பா.ஜனதா ஆட்சியை ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார்
3. லடாக் மோதலை அரசியல் ஆக்கக்கூடாது; சரத்பவார் கருத்து
லடாக் மோதலை அரசியல் ஆக்கக்கூடாது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
4. கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை -ராகுல் காந்தி குற்றச்சாட்டு
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
5. கட்சி, ஆட்சி அதிகாரத்தில் 2 பேர் ஆதிக்கம் ஏன்?" பாஜகவுக்கு காங்கிரஸ் கேள்வி
பெரும்பான்மை மக்களின் ஆட்சி என்று சொல்லப்படும் நிலையில் 2 பேர் ஆதிக்கமே மேலோங்கியும், மற்றவர்கள் எல்லாம் அதிகாரமற்றும் இருப்பது ஏன் என ஆளும் பா.ஜ.க. விளக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.