மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் 1008 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,506 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை,
நாட்டிலேயே மராட்டிய மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. கொத்து கொத்தாக மும்பை உள்ளிட்ட இடங்களில் கொரோனா பரவுவதால், மராட்டியத்தில் நாள் தோறும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது.
மராட்டிய மாநிலத்தில் இன்று ஒருநாளில் மட்டும் 1008 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மராட்டியத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,506 ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்திலேயே அதிகபட்சமாக தலைநகர் மும்பையில் 751 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மும்பையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,625 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story