ஊரடங்கை மதிக்காமல் டியூசனுக்கு அனுப்பியதாக பெற்றோர் மீது சிறுவன் புகார்
ஊரடங்கை மதிக்காமல் டியூசனுக்கு அனுப்பியதாக பெற்றோர் மீது சிறுவன் புகார் அளித்த ருசிகர சம்பவம் பஞ்சாப்பில் நிகழ்ந்துள்ளது.
பாட்டியாலா
பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் ஊரடங்கை கண்காணிப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வழியாக வந்த சிறுவனை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது, பெற்றோர் தன்னை கட்டாயப்படுத்தி டியூஷனுக்கு அனுப்புவதாக சிறுவன் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் சிறுவனை அழைத்துக் கொண்டு டியூஷன் ஆசிரியை வீட்டிற்கு சென்று ஊரடங்கை மீறி டியூஷன் எடுக்கக் கூடாது என்று எச்சரித்தனர். அப்போது குறுக்கிட்ட சிறுவன், தன்னை போல மூன்று சிறுவர்கள் டியூஷனுக்கு வருவதாகவும் புகார் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சிறுவனின் பெற்றோரை அழைத்து பிள்ளைகளை டியூஷனுக்கு அனுப்ப வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story