கான்கிரீட் மிக்சர் டிரக்கில் பதுங்கி சொந்த ஊர் செல்ல முயன்ற 18 தொழிலாளர்கள்


கான்கிரீட் மிக்சர்  டிரக்கில் பதுங்கி  சொந்த ஊர் செல்ல முயன்ற 18 தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 2 May 2020 4:42 PM IST (Updated: 2 May 2020 6:31 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் கான்கிரீட் மிக்சர் டிரக்கில் பதுங்கி சொந்த ஊர் செல்ல முயன்ற 18 தொழிலாளர்கள் பிடிபட்டனர்.

இந்தூர்: 

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து மார்ச் 24 நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கட்டிட வேலை உள்ளிட்ட பணிகளை செய்து வந்த வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். இதேபோல் வெளிமாநிலங்களில் தங்கி படிக்கும் மாணவர்கள், மற்றும் சுற்றுலா சென்று இருந்தவர்களும் தங்கள் ஊர்களுக்கு திரும்ப முடியவில்லை.

இந்த நிலையில் மீண்டும் ஊரடங்கு வருகிற 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது

மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் மற்றும் உஜ்ஜைன் மாவட்டங்களுக்கு இடையிலான எல்லையில் போலீசார்  சட்டவிரோதமாக மக்கள் நடமாட்டம் இருக்கிறதா என்று வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். 

அப்போது கான்கிரீட் மிக்சர்  டிரக் வந்தது. போலீசார் அதனை நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.டிரைவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் கான்கிரீட் மிக்சருக்குள் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது  அதற்குள் தொழிலாளர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. கான்கிரீட் மூடியை திறந்த போது 18 தொழிலாளர்கள் உள்ளே அமர்ந்திருந்ந்தார்கள்

அவர்கள் மராட்டிய மாநிலத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் லக்னோ செல்கின்றனர்.கான்கிரீட் மிக்சர்  டிரக் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவர்கள் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் தொற்றுநோய்க்காக பரிசோதிக்கப்பட்டனர். அவர்கள் லக்னோவுக்கு பஸ் வழியாக  செல்ல மாநில அரசு தற்போது ஏற்பாடு செய்து வருகிறது.


Next Story