காஷ்மீரில் பாகிஸ்தான் தொடர் தாக்குதல்: இந்திய வீரர்கள் 2 பேர் வீர மரணம்


காஷ்மீரில் பாகிஸ்தான் தொடர் தாக்குதல்: இந்திய வீரர்கள் 2 பேர் வீர மரணம்
x
தினத்தந்தி 3 May 2020 2:36 AM IST (Updated: 3 May 2020 2:36 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 2 பேர் வீர மரணம் அடைந்தனர்.

ஸ்ரீநகர், 

காஷ்மீரில் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டார் அருகே எல்லையோர கிராமங்களை நோக்கி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 2 சிறுமிகள் காயம் அடைந்தனர்.

இதற்கிடையே அதே மாவட்டத்தின் ராம்பூர் செக்டார் பகுதியிலும் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களில் 2 பேர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி வீர மரணம் அடைந்தனர்.

இந்தியாவில் அமைதியை சீர்குலைக்க செய்யும் வகையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை எல்லை வழியாக ஊடுருவச் செய்ய, சதித்திட்டம் தீட்டி பாகிஸ்தான் ராணுவம் இத்தகைய தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும் பாகிஸ்தானின் அனைத்து முயற்சிகளையும் முறியடிக்க இந்திய ராணுவம் தயாராக இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story