சென்னையில் இன்று ஒரே நாளில் 8 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு


சென்னையில் இன்று ஒரே நாளில் 8 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 3 May 2020 5:18 PM IST (Updated: 3 May 2020 5:18 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இன்று ஒரே நாளில் 8 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில்  குறிப்பாக சென்னையில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாவர்களின்  எண்ணிக்கை மூன்று இலக்க எண்களிலேயே உள்ளது.

கொரோன தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள், காவலர்களும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். 

சென்னையில் இன்று ஒரு நாளில் மட்டும் 8 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அயனாவரம் போக்குவரத்து உதவி ஆய்வாளர், ஐஸ் அவுஸ் தீயணைப்பு உதவி ஆய்வாளர் உள்பட 8 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


Next Story