ரீபண்ட் அளிப்பதாக போலி லிங்க்: வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை
ரீபண்ட் அளிப்பதாக கூறும் போலி லிங்க்குகளை வரி செலுத்துவோர் யாரும் அழுத்த வேண்டாம் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி,
வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வருமான வரி ரீபண்ட் அளிப்பதாக கூறும் லிங்க்குகளை வரி செலுத்துவோர் யாரும் அழுத்த வேண்டாம். இவையெல்லாம் பொய்யானவை. வருமான வரித்துறை இதை அனுப்புவது இல்லை. இ-மெயில் மூலமாக எந்த தனிநபர் தகவல்களையும் கேட்பது இல்லை. அதுபோல், வங்கிக்கணக்கு, கிரெடிட் கார்டு போன்றவற்றின் பின் எண், கடவுச்சொல் போன்றவற்றையும் கேட்பது இல்லை.
எனவே, பொய் செய்தியுடன் வரும் அட்டாச்மெண்ட், பைல் எதையும் திறக்க வேண்டாம். வருமான வரித்துறையால் அதிகாரம் அளிக்கப்பட்டவர் என்று கூறிக்கொள்ளும் எவரது இ-மெயிலுக்கும் பதில் அளிக்க வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story