கேரளாவில் 2-வது நாளாக புதிதாக கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை- முதல்வர் பினராயி விஜயன்


கேரளாவில் 2-வது நாளாக புதிதாக கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை- முதல்வர் பினராயி விஜயன்
x
தினத்தந்தி 4 May 2020 7:45 PM IST (Updated: 4 May 2020 7:45 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் 2-வது நாளாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

இந்தியாவில் கோரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 42  ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால்   1373 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  11707- ஆக உள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ள நிலையில், இந்தியாவில் முதன் முதலில் கொரோனா தொற்று பதிவான கேரளாவில், கொரோனா பாதிப்பு கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்க எண்கள் அல்லது அதற்கு சற்றும் கூடுதலான எண்ணிக்கையிலேயே  இருந்தது. நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை. 

இந்த நிலையில்,  2-வது நாளாக கேரளாவில் இன்று புதிதாக கொரோனா நோய்த்தொற்று யாருக்கும் பதிவாகவில்லை. ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்ட 34 -பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒருநாளில் மட்டும் 61 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் இதுவரை 499 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், 462 பேர் குணமடைந்துள்ளனர்.


Next Story