பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி- முதல்வர்


பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த  துணை ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி- முதல்வர்
x
தினத்தந்தி 5 May 2020 5:55 PM IST (Updated: 5 May 2020 5:55 PM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் உள்ள வங்கம்-காசியாபாத் என்ற இடத்தில் நேற்று மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள், அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த திடீர் தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான ஒருவர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகர் (வயது 30) என்ற வீரரும் அடங்குவார். இவர் செங்கோட்டை 3 வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

பயங்கரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த சி.ஆர்.பி.எப் வீரரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும்,   உயிரிழந்த துணை ராணுவ வீரர் சந்திரசேகரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும்  முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Next Story