கேரளாவில் இன்று 3 பேருக்கு கொரோனா பாதிப்பு- முதல்வர் பினராயி விஜயன்


கேரளாவில் இன்று 3 பேருக்கு கொரோனா பாதிப்பு- முதல்வர் பினராயி விஜயன்
x
தினத்தந்தி 5 May 2020 5:58 PM IST (Updated: 5 May 2020 5:58 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் 2 நாட்களுக்குப் பிறகு இன்று கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

திருவனந்தபுரம், 

இந்தியாவிலேயே முதன் முதலாக கொரோனா தொற்று  ஏற்பட்ட மாநிலம் கேரளாதான்.  கேரளா அரசு மேற்கொண்ட தொடர் தடுப்பு நடவடிக்கைகளால் கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக கேரளாவில் புதிதாக நோய்த்தொற்று எதுவும் பதிவாகவில்லை.  

இந்த நிலையில், இன்று  3 பேருக்கு கேரளாவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட 3 பேரும் வயநாடு  மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள் ஆவர். கேரளாவில் இதுவரை  502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  சென்னையில் இருந்து வயநாடு வந்த லாரி ஓட்டுநர் மூலமாக  3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில், கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 37 ஆக உள்ளது. மேற்கூறிய தகவல்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். 

Next Story