மே 17-க்கு பிறகு என்ன திட்டம் உள்ளது ; மத்திய அரசுக்கு சோனியா காந்தி கேள்வி
மே.17 ஆம் தேதிக்கு பிறகு அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை பின்பற்ற போகிறது என்று சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,
நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகளுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி, பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், சத்தீஸ்கர்முதல்வர் பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எம்.பி. ராகுல் காந்தி ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்தக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்தியஅரசு மூன்றாம் கட்ட ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. வரும் 17-ம் தேதி முடியும் இந்த ஊரடங்கை எவ்வாறு தளர்த்த மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பினார். அதுமட்டுமல்லாமல், மே 17-ம் தேதிக்குப்பின் என்ன வகையான தி்ட்டங்களை செயல்படுத்தப்போகிறது மத்திய அரசு என்றும் சோனியா காந்தி கேள்வி எழுப்பினார்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில் “ சோனியா காந்தி கூறுவதை போல மே 17-ம் தேதிக்குப்பின் ஊரடங்கை எவ்வாறு மத்திய அரசு தளர்த்தப்போகிறது, 17-ம் தேதிக்குப்பின் என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம் அனைத்து மாநில முதல்வர்களும் இதுகுறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி, ஊரடங்கை எவ்வாறு தளர்த்துவீர்கள், அதன்பின் திட்டம் என்ன என்பதை கேட்க வேண்டும்”என்றார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசுகையில் “கொரோனாவில் இருந்து முதியோர்கள், நீரழிவு நோயாளிகள்,இதய நோயாளிகளை காக்க என்ன வழிமுறைகளை மத்தியஅரசு வைத்துள்ளது” என்றார்.
Related Tags :
Next Story