மத்திய அரசு மக்களுக்கு பணத்தை வழங்குவதற்கு பதிலாக அவர்களிடம் இருந்து பணத்தை எடுக்கிறது - ப.சிதம்பரம்


மத்திய அரசு மக்களுக்கு பணத்தை வழங்குவதற்கு பதிலாக அவர்களிடம் இருந்து பணத்தை எடுக்கிறது - ப.சிதம்பரம்
x
தினத்தந்தி 6 May 2020 1:06 PM GMT (Updated: 6 May 2020 1:06 PM GMT)

மத்திய அரசு, மக்களுக்கு பணத்தை வழங்குவதற்கு பதிலாக அவர்களிடம் இருந்து பணத்தை எடுப்பதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை, 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தநிலையில், பெட்ரோல் லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் லி்ட்டருக்கு 13 ரூபாயும் உற்பத்தி வரியில் மத்திய அரசு நேற்று உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “மத்திய அரசு தனது நிதி பற்றாக்குறையை போக்குவதற்கு கடன் வாங்க வேண்டும். கொரோனா வைரஸ் காரணமாக நிலவும் ஊரடங்கால் பொருளாதாரம் சரி்ந்து கிடக்கும் இந்த சூழலில் அதிகமான வரிகளை விதிக்கக் கூடாது. பொருளாதார வளர்ச்சி நல்ல நிலையில், உச்சத்தில் இருக்கும் போதுதான் புதிய வரி விதிக்கலாம், வரியை உயர்த்தலாம். ஆனால் இப்போது வரிவிதிப்பது கொடூரமானது. ஏற்கெனவே ஊரடங்கால் பெரும் துன்பத்தில் இருக்கும் நடுத்தர மக்கள், ஏழைகளை இந்த வரிச்சுமை மேலும் வேதனைப்படுத்தும், ஏழ்மையில் தள்ளும்.

நாட்டு மக்கள் தொகையில் பாதி பேருக்கு பணத்தை நேரடியாக வழங்கிடுங்கள் என்று மத்திய அரசை தொடர்ந்து மன்றாடி வருகிறோம். ஆனால், மத்திய அரசோ மக்களுக்கு பணத்தை வழங்குவதற்கு பதிலாக அவர்களிடம் இருந்தே பணத்தை எடுக்கிறது. கொடுமை” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story