இந்தியாவில் 5-11 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் 7.1 கோடி பேர் மொபைலை பயன்படுத்துகின்றனர்


படம்: REUTERS
x
படம்: REUTERS
தினத்தந்தி 7 May 2020 1:58 PM IST (Updated: 7 May 2020 6:09 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் 5-11 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் 7.1 கோடி பேர் மொபைலில் இணைய சேவையை பயன்படுத்துவதாக ஆய்வு அறிக்கை ஒன்றில் கூறப்பட்டு உள்ளது.

புதுடெல்லி

இந்தியாவில் 50.4 கோடி பேர் இணைய சேவையை பயன்படுத்துகின்றனர் அவர்களில் 14 சதவீதம் பேர் வயதுக்குட்பட்டவர்கள் என்று இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் (ஐஏஎம்ஐஐ) புதிய ஆய்வு அறிக்கை தெரிவித்து உள்ளது.

இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் ஆய்வு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நவம்பர் 2019 நிலவரப்படி, இந்தியாவில்  12 பிளஸ் வயதுடைய 43.3 கோடி பேர் இணைய சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.  7. 1 கோடி  பேர் 5-11 வயதுடையவர்கள் இவர்கள் குடும்ப உறுப்பினர்களின் தந்தை, சகோதரர், சகோதரி என குடும்ப உறுப்பினர்களின் இணைய சேவையை அணுகும் நபர்களாக உள்ளனர்.

நகர்ப்புற இந்தியாவில் உள்ள 10 இணைய பயனர்களில் ஒன்பது பேர் வாரத்திற்கு ஒரு முறையாவது இணையத்தை அணுகுகிறார்கள். மார்ச் 2019 உடன் ஒப்பிடும்போது தினசரி 3 கோடி பேர்  புதிய பயனர்கள் இணையத்தை அணுகுகிறார்கள்.

இந்தியாவில், மூன்றில் ஒரு பங்கு பயனர்கள் ஞாயிற்றுக்கிழமை அல்லது விடுமுறை நாட்களில் சாதாரண நாட்களை விட ஒரு மணி நேரம் அதிகமாக இணையத்தை அணுகுகிறார்கள் என அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story