தேசிய செய்திகள்

கொரோனா சிகிச்சைக்காக 5,231 ரயில் பெட்டிகள் தயார்: ரயில்வே துறை + "||" + As many as 5,231 coaches converted into COVID care centres: Railway

கொரோனா சிகிச்சைக்காக 5,231 ரயில் பெட்டிகள் தயார்: ரயில்வே துறை

கொரோனா சிகிச்சைக்காக 5,231 ரயில் பெட்டிகள் தயார்: ரயில்வே துறை
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 5,231 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,  

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில், இந்திய அரசின் சுகாதாரப் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும் வகையில், இந்திய ரயில்வே பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. 

இந்நிலையில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 5,231 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது

இந்திய ரயில்வே தனது 5,231 பயணிகள் ரயில் பெட்டிகளை கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்றியுள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கியுள்ள வழிகாட்டி நெறிமுறைகளின் படி இந்த கொரோனா பராமரிப்பு மையங்களில் மிதமான அறிகுறிகள் உள்ள நோயாளிகள் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார்கள்.

மேலும் இந்த ரயில் பெட்டிகள் மாநில அரசுகளின் மருத்துவ வசதிகள் முழுவதும் பயன்படுத்தப்பட்டு விட்ட நிலையில் உள்ள பகுதிகளில், கூடுதல் வசதியாகப் பயன்படுத்தப்படும். இந்த ரயில் பெட்டிகளால் சந்தேகப்படும் கொரோனா நோயாளிகள் மற்றும் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைக்கும் வசதிகள் அதிகரிக்கும். மண்டல ரயில்வேக்கள் இந்த ரயில் பெட்டிகளைத் தனிமைப்படுத்தி வைக்கும் மையங்களாக உருமாற்றி உள்ளன.

215 ரயில் நிலையங்களில் உள்ள தனிமைப்படுத்தி வைக்கும் மையங்களில், 85 நிலையங்களுக்கு மட்டுமே சுகாதாரப் பராமரிப்பு வசதிகளை ரயில்வே செய்து தரும். மீதி உள்ள 130 ரயில் நிலையங்களுக்கு மாநில அரசுகள் சுகாதாரப் பணியாளர்களையும், அத்தியாவசிய மருந்துகளையும் வழங்குவதாக ஒத்துக் கொண்டு வேண்டுகோள் விடுத்தால், அவர்களுக்கு கொரோனா பராமரிப்பு ரயில் பெட்டிகள் ஒதுக்கித் தரப்படும். ரயில்வே இந்த கொரோனா பராமரிப்பு ரயில் பெட்டி மையங்களுக்காக 158 ரயில் நிலையங்களில் தண்ணீர் வசதி மற்றும் மின்னேற்ற வசதிகளை தயார் நிலையில் வைத்துள்ளது. 58 ரயில் நிலையங்களில் தண்ணீர் வசதி மட்டும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சங்கராபுரத்தில் கொரோனாவுக்கு அரசு பஸ் டிரைவர் பலி
சங்கராபுரத்தில் கொரோனாவுக்கு அரசு பஸ் டிரைவர் பலியானார்.
2. ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு பெண் பலி
ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு பெண் பலியானார்.
3. முதியவர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா ; 3 பேர் வீடு திரும்பினர்
புதுச்சேரியில் 2 முதியவர் உள்பட மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்த 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
4. கொரோனாவால் வருமானம் பாதிப்பு: பணம் அனுப்புவதில் ரூ.8.17 லட்சம் கோடி சரிவு - ஐ.நா. பொதுச்செயலாளர் தகவல்
கொரோனாவால் வருமானம் பாதித்துள்ளது. இதனால் பணம் அனுப்பவுதில் ரூ.8.17 லட்சம் கோடி அளவுக்கு சரிவு ஏற்படும் என்று ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கூறி உள்ளார்.
5. கொரோனாவால் நிதிநெருக்கடி: விமானங்கள், ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விட உ.பி. அரசு திட்டம்
கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடி காரணமாக, விமானங்கள், ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விட உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது.