இந்தியாவில் 216 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை


இந்தியாவில் 216 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 8 May 2020 11:38 AM GMT (Updated: 8 May 2020 11:38 AM GMT)

இந்தியாவில் 216 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி

மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் கூறி இருப்பதாவது;-

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,542 ஆக உயர்ந்து உள்ளது. இந்தியாவில் 216 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை. கடந்த 28 நாட்களில் 42 மாவட்டங்களில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் சதவீதம் 29.36 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 3390  புதிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.1273 பேர் குணமடைந்து உள்ளனர். நாம் செய்ய வேண்டியவை   மற்றும் செய்யக்கூடாதவைகளைப் பின்பற்றினால், கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையில் நாம் உச்சத்தை எட்டமாட்டோம் என கூறி உள்ளார்.


Next Story