இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று - மத்திய சுகாதாரத்துறை


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று - மத்திய சுகாதாரத்துறை
x
தினத்தந்தி 8 May 2020 5:17 PM IST (Updated: 8 May 2020 5:17 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் தெரிவித்தார்.


புதுடெல்லி,

மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர்  லாவ் அகர்வால் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 1273 பேர் கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்துள்ளனர்.

 இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 29.36 சதவிகிதமாக உள்ளது. தற்போது வரை 16,540  பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.  கொரோனா பாதிப்புக்காக 37,916 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

தளர்வுகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்புவது பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், கொரோனா வைரசுடன் நாம் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.  கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகளை நாம் வாழ்க்கை முறை மாற்றங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார் 

Next Story