சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு


சிபிஎஸ்இ  10 மற்றும் 12 ஆம் வகுப்பு  பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 8 May 2020 5:26 PM IST (Updated: 8 May 2020 5:26 PM IST)
t-max-icont-min-icon

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக சிபிஎஸ்இ  பொதுத்தேர்வுகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

 இந்த நிலையில், வரும் ஜுலை 1 முதல் 15 ஆம் தேதி வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனத்தகவல்கள் கூறுகின்றன. 


Next Story