பாஸ்மதி அரிசி ஏற்றுமதி நிறுவனம் மீது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சிபிஐயிடம் புகார்


பாஸ்மதி அரிசி ஏற்றுமதி நிறுவனம் மீது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சிபிஐயிடம் புகார்
x
தினத்தந்தி 9 May 2020 6:26 AM GMT (Updated: 9 May 2020 6:26 AM GMT)

ரூ.414 கோடி கடன் வாங்கியவர்களை காணவில்லை என பாஸ்மதி அரிசி ஏற்றுமதி நிறுவனம் மீது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சிபிஐயிடம் புகார் அளித்துள்ளது.

புதுடெல்லி

டெல்லியைச் சேர்ந்த பாஸ்மதி அரிசி ஏற்றுமதி ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட்  நிறுவனத்திற்கு எதிராக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா  சிபிஐயிடம் புகார் அளித்துள்ளது. ரூ.414 கோடி கடன் வாங்கியவர்களை காணவில்லை என்றும் வெளிநாடு தப்பி ஓடிவிட்டதாகவும். 2016 முதல் காணவில்லை புகார் அளித்து உள்ளனர்.

அந்த நிறுவன உரிமையாளர்களான சுரேஷ்குமார், நரேஷ் குமார் மற்றும் சங்கீதா ஆகியோர் மீது  சிபிஐ ஏப்ரல் 28 அன்று வழக்கு பதிவு செய்து உள்ளது. மற்றும் அவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

2018 ஆம் ஆண்டின் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் (என்சிஎல்டி) சம்பந்தப்பட்டவர்கள் துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது.

நிறுவனத்தின் கடன்கள் 2016 இல் செயல்படாத சொத்து (என்.பி.ஏ) என வகைப்படுத்தப்பட்டன. நான்கு ஆண்டு தாமதத்திற்குப் பிறகு இந்த ஆண்டு பிப்ரவரியில் வங்கி நிறுவனம் மீது புகார் அளித்து உள்ளது.

இந்த நிறுவனம் ஸ்டேட்பாங்க் ஆப் ந்தியாவிடம் ரூ .173 கோடி, கனரா வங்கியிடம் ரூ .76 கோடி, யூனியன் வங்கியிடம் ரூ.64 கோடி, மத்திய வங்கியிடம் ரூ.51 கோடி, கார்ப்பரேஷன் வங்கியிடம் ரூ.36 கோடி, ஐடிபிஐ வங்கியிடம் ரூ.12 கோடி கடன் வாங்கி உள்ளது.

Next Story