பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஒத்திவைப்பா? மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம்


பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஒத்திவைப்பா? மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம்
x
தினத்தந்தி 10 May 2020 7:36 PM IST (Updated: 10 May 2020 7:36 PM IST)
t-max-icont-min-icon

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 47-நாளை கடந்துள்ள போதிலும் இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் கட்டுக்குள் வந்தபாடில்லை.  இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 63 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா நோயின் தாக்கம் இந்தியாவில் ஜுன், ஜூலை மாதங்களில் தான் உச்சத்தை எட்டும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்று கேள்விகள் எழுந்தன. 

இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், ”தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. இருந்தாலும் மழைக்கால கூட்டத்தொடர் குறிப்பிட்ட காலத்தில் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. என்றாலும், கூட்டம் நடைபெறுவது அந்த நேரத்தில் உள்ள சூழ்நிலையை பொறுத்தது”என்றார்.  வழக்கமாக  இந்திய பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜுன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும்.  

Next Story