மராட்டியத்தில் புதிதாக 1,278 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


மராட்டியத்தில் புதிதாக 1,278 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 10 May 2020 10:20 PM IST (Updated: 10 May 2020 10:20 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் இன்று புதிதாக 1,278 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை, 

மராட்டிய மாநிலத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டி போட்டு உள்ளது. இங்கு நாள் தோறும் நோய் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக கடந்த 5 நாட்கள் தொடா்ந்து முறையே 1,233, 1,362, 1,216, 1,089, 1,165 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது.

இந்தநிலையில் இன்று புதிதாக 1,278 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மராட்டியத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 171 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் இன்று கொரோனா தொற்றுக்கு 53 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Next Story