காஷ்மீர் எல்லையில் கையெறி குண்டுகள், வெடி மருந்துகள் கண்டெடுப்பு


காஷ்மீர் எல்லையில் கையெறி குண்டுகள், வெடி மருந்துகள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 11 May 2020 3:30 AM IST (Updated: 11 May 2020 1:07 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே கையெறி குண்டுகள், வெடி மருந்துகள் கண்டெடுக்கப்பட்டன.

ஸ்ரீநகர், 

காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே உள்ள காட்டுப் பகுதியில் வெடி மருந்துகள் மற்றும் வெடிகுண்டுகள் கிடப்பதாக, அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அந்த பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் 3 கையெறி குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் இருப்பதை கண்டனர். இதையடுத்து அதனை பத்திரமாக மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பா மற்றும் கதுவா மாவட்ட எல்லையில் சமீபத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டதாகவும், அப்போது இந்த வெடிமருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறினர்.

Next Story