10 கோடியை நெருங்கியது “ஆரோக்கிய சேது” செயலி தரவிறக்கம்!
ஆரோக்கிய சேது செயலி தரவிறக்கம் 10 கோடியை நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பரவலை கண்காணிக்க, ‘ஆரோக்கிய சேது’ செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உடையவர்களுடன் நாம்தொடர்பில் இருந்தோமா என்ற விவரத்தை இந்த செயலி தெரிவிக்கும்.அதன் மூலம் முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்.
கொரோனா குறித்து விழிப்புணர்வுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியை மத்திய மாநில அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் கண்டிப்பாக தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டுமென அரசு வலியுறுத்தி வருகிறது.
தற்போது இந்த செயலியை 9.6 கோடி பேர் தரவிறக்கம் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த செயலி குறித்து கூறிய நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த், ஆரோக்கிய சேது செயலி மூலம் 650 கொரோனா ஹாட்ஸ்பாட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதேபோல 300 நோய்ப்பரவும் பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றார்.
மேலும் 69 மில்லியன் மக்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளவும், 34 லட்சம் பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதையும் இந்த செயலி மூலம் தெரிவித்துள்ளனர். இந்த செயலி மூலம் 16ஆயிரம் பேருக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர். இந்த செயலியில் பதிவிட்ட சுமார் 12,500 பேர் கொரோனா பாசிட்டிவ் என கண்டறியப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story