எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துக் கூறிய ஜனாதிபதி, பிரதமருக்கு நன்றி- முதல்வர் பழனிசாமி டுவிட்
இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 66-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்துச்செய்தியில், “ மிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நல்ல உடல்நலத்துடன் நீண்டகாலம் மக்கள் பணியாற்ற பிரார்த்தனை செய்கிறேன்” என்று பதிவிட்டு இருந்தார். பிறந்த நாள் வாழ்த்து கூறியமைக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமியும் தனது டுவிட்டரில் பதிவிட்டார்.
அதேபோல், மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவும் தமிழக முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அண்டை மாநிலமான கேரள முதல்வரும் முதல்வர் பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். “ முதல்வர் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியுடனும் நல்ல உடல் நலத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன்” என்று பினராயி விஜயன் வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை சபாநயகர் ஓம்பிர்லா, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்,அசாம் முதல் மந்திரி சர்பானந்த சோனவால், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோரும் முதல்வர் பழனிசாமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ஆகியோரும் முதல்வர் பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பிரதமருக்கு நன்றி
இதற்கிடையே, பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூறியதற்காக ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக முதல்வர் பழனிசாமி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் பழனிசாமி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “எனது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர், மாண்புமிகு துணை குடியரசு தலைவர், மாண்புமிகு பாரத பிரதமர், மாண்புமிகு தமிழக, தெலுங்கானா ஆளுநர்கள், மாண்புமிகு மத்திய அமைச்சர் பெருமக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்புப் பணிகளில் அனைவரும் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் இத்தருணத்தில், எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்தேன். இருப்பினும் தொலைபேசி மூலம் என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளர்.
Related Tags :
Next Story