இந்தியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு பெருமளவு குறைவு
ஊரடங்கால் இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு நாட்டில் நச்சு கார்பன்டை ஆக்சைடு வாயு உமிழ்வு பெருமளவு குறைந்து உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி
உலகில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது, கொரோனா பாதிப்பு காரணமாக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நாட்டில் தொழிற்சாலைகள் இயங்க வில்லை. வாகன் போக்குவரத்து கணிசமாககுறைந்து உள்ளது. இதனால் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு நாட்டில் நச்சு கார்பன்டை ஆக்சைடு வாயு உமிழ்வு பெருமளவு குறைந்து உள்ளது என ஆற்றல் மற்றும் சுத்தமான காற்று பற்றிய ஆராய்ச்சி மைய லவுரி மைலிவிர்தா மற்றும் சுனில் தஹியா ஆகியோர் கூறி உள்ளனர்.
ஆற்றல் மற்றும் சுத்தமான காற்று பற்றிய ஆராய்ச்சி மைய ஆய்வில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாட்டில் மார்ச் மாதம் 15 சதவீத காற்று மாசு ( நச்சு கார்பன் டை ஆக்சைடு) குறைந்து உள்ளது. இது ஏப்ரல் மாதம் 30 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளது.
நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயுக்கான சமீபத்திய நுகர்வு தரவுகளைப் பயன்படுத்தி, முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, 2019-20 நிதியாண்டில் கார்பன்டை ஆக்சைடு உமிழ்வு 30 மில்லியன் டன் குறைந்துள்ளது.
பல்வேறு அமைச்சகங்களின் அரசாங்க தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வு, நிலக்கரி எரியும் ஆலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மார்ச் மாதத்தில் 15 சதவீதமகவும் ஏப்ரல் முதல் மூன்று வாரங்களில் 31 சதவீதமாகவும் ஆகவும் சரிந்தது என்று கூறியுள்ளது.
இதற்கு மாறாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (RE) உற்பத்தி மார்ச் மாதத்தில் 6.4 சதவீதம் அதிகரித்துள்ளது, மேலும் ஏப்ரல் முதல் மூன்று வாரங்களில் 1.4 சதவீதம் சிறிதளவு குறைந்துள்ளது
கடந்த ஆண்டு முந்தைய ஆய்வில், நிலக்கரி எரியும் மின்சார உற்பத்தியின் விரிவாக்கத்தில் மந்தநிலை காரணமாக கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகளின் வளர்ச்சியில் கூர்மையான வீழ்ச்சி ஏற்படும் என்று மைலிவிர்தா மற்றும் தஹியா கணித்துள்ளனர்.
Related Tags :
Next Story