சமூக தொலைதூர விதிமுறைகளை மீறி சமண துறவியை வரவேற்க கூடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்
சமூக தொலைதூர விதிமுறைகளை மீறி மத்திய பிரதேசத்தில் சமண துறவியை வரவேற்க கூடிய ஆயிர க்கணக்கான பக்தர்கள்
பண்டா
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் தவிர்க்க முடியாத மற்றும் கவலைக்குரியதாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 3,525 அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மத்தியப் பிரதேசமும் ஒன்றாகும், அங்கு 3,986 உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளும் 225 இறப்புகளும் பதிவாகி உள்ளன.
நாடு முழுவதும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க வற்புறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் நேற்று ஒரு சமண துறவி பிரமன்சாகர் வருகையை கொண்டாட ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். சமூக தொலைதூர நெறிமுறைகளை அப்பட்டமாக மீறி இந்த கூட்டம் நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் துறவி பிரமன்சாகரைச் சுற்றி திரண்டு வந்தனர்
சமூக தொலைதூர விதிமுறைகள் மற்றும் பெரிய கூட்டங்களை தடைசெய்யும் உத்தரவுகள் (பிரிவு 144 இன் கீழ்) வெளிப்படையாக மீறப்பட்டுள்ளன. அமைப்பாளர்கள் மீது விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது," என்று கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் பூரியா கூறி உள்ளார்
சாகர் மாவட்டத்தில் இதுவரை 10 கொரோனா பாதிப்புகள் மற்றும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.
சமூக தொலைதூர விதிமுறைகளை மீறுவது நாடு முழுவதும் நிகழ்ந்துள்ளது, இது ஒரு கிரிமினல் குற்றமாக மாற்றப்பட வேண்டும் என்று அரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story