ரூ .20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார திட்டம் ‘ஒரு பெரிய பூஜ்ஜியம்’: மாநிலங்களுக்கு எதுவும் இல்லை - மம்தா பானர்ஜி


ரூ .20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார திட்டம் ‘ஒரு பெரிய பூஜ்ஜியம்’: மாநிலங்களுக்கு எதுவும் இல்லை - மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 13 May 2020 7:42 PM IST (Updated: 13 May 2020 7:42 PM IST)
t-max-icont-min-icon

ரூ .20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார திட்டம் ஒரு பெரிய பூஜ்ஜியம் என்றும், அதில் மாநிலங்களுக்கு எதுவும் இல்லை என்று மேற்கு வங்க முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா, 

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில், பிரதமர் மோடி கூறிய ரூ.20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை வெளியிட்டார். 

இந்நிலையில் மத்திய அரசு அறிவித்த சிறப்பு பொருளாதார திட்டத்தின் தொகுப்பு, ஒரு பெரிய பூஜ்யம் என்றும், அதில் மாநிலங்களுக்கு எதுவும் இல்லை என்றும் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், “கொரோனா வைரஸ் பாதிப்புகளில் மத்திய அரசு மக்களை தவறாக வழிநடத்துகிறது. மத்திய அரசு அறிவித்த சிறப்பு பொருளாதார திட்டத்தால் மக்கள் நிவாரணம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இது ஒரு பெரிய பூஜ்ஜியம். அதில் மாநிலங்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை. பொருளாதார தொகுப்பின் மூலம் கூட்டாட்சி முறையை மத்திய அரசு தகர்க்க முயற்சி செய்கிறது.

மேலும் சிறப்பு பொருளாதார திட்டத்தில் அமைப்புசாரா துறை, பொதுச் செலவு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்குதல் குறித்து எதுவும் இல்லை. நிதி பற்றாக்குறையால் வாடும் மாநிலங்களுக்கு மத்திய அரசு எதையும் வழங்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Next Story