புலம்பெயர்ந்தோரை மாநிலத்திற்கு அழைத்து வர 105 கூடுதல் சிறப்பு ரெயில்கள்: மம்தா பானர்ஜி


புலம்பெயர்ந்தோரை மாநிலத்திற்கு அழைத்து வர 105 கூடுதல் சிறப்பு ரெயில்கள்: மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 14 May 2020 4:25 PM IST (Updated: 14 May 2020 4:25 PM IST)
t-max-icont-min-icon

புலம்பெயர்ந்தோரை அழைத்து வர 105 கூடுதல் சிறப்பு ரெயில்கள் விடப்படும் எனமேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.

கொல்கத்தா: 

நாட்டின் பிற பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நாடு திரும்ப அழைத்து வர 105 கூடுதல் சிறப்பு ரெயில்களை மேற்குவங்காள  அரசு இயக்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

"நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மற்றும் வங்காளத்திற்குத் திரும்ப விரும்பும் அனைவருக்கும் உதவ  நாங்கள் 105 கூடுதல் சிறப்பு ரெயில்களை ஏற்பாடு செய்துள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். வரவிருக்கும் நாட்களில், இந்த சிறப்பு ரெயில்கள் மேற்குவங்காளத்தின் பல்வேறு இடங்களுக்கு வெவ்வேறு மாநிலங்களில் இருந்து நமது மக்களை வீட்டிற்கு அழைத்து வரும் என கூறி உள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதினார். அதில் மாநில அரசு ஒத்துழைக்க கேட்டு கொண்டார்.

அமித்ஷா கடிதம் எழுதிய பிறகும் மாநில அரச ரெயில் போக்குவரத்தை முன்னேற்றவில்லை என்று ரெயில்வே அமைச்சர் குறிப்பிட்டார்.

Next Story