புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை கிடைக்க நடவடிக்கை - நிர்மலா சீதாராமன்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
*நகர்புறத்தில் வீடில்லாத ஏழைகள் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டு மார்ச் 28 முதல் இலவச உணவு வழங்கப்படுகிறது.
*ஏற்கனவே 3 கோடி விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன.
*புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் கிராமங்களிலேயே வேலை வாய்ப்பு வழங்க 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நடவடிக்கை
*வெளிமாநிலங்களுக்கு புலம் பெயரும் தொழிலாளர்களுக்கும் அரசின் நல திட்டங்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேசிய அளவில் ஒரே மாதிரியான ஊதியத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
*அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆண்டு தோறும் முழு உடல் பரிசோதனை
* அனைவருக்கும் குறைந்த பட்ச ஊதியம் உறுதி செய்யப்படும்.
* தொழிலாளர்களின் நலனை காக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
* அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் உரிய நேரத்தில் ஊதிய கிடைப்பது உறுதி செய்யப்படும்.
*தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் ஏற்கனவே 2.33 கோடி தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.
*ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும்.
*ரேஷன் அட்டைகளை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடைகளிலும் பயன்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story