சிக்கிமில் பனிச்சரிவு; ராணுவ கர்னல் மற்றும் படை வீரர் பலி


சிக்கிமில் பனிச்சரிவு; ராணுவ கர்னல் மற்றும் படை வீரர் பலி
x
தினத்தந்தி 15 May 2020 9:29 AM IST (Updated: 15 May 2020 9:29 AM IST)
t-max-icont-min-icon

சிக்கிமின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இந்திய ராணுவ கர்னல் மற்றும் படை வீரர் ஒருவர் உயிரிழந்தனர்.

புதுடெல்லி,

சிக்கிமின் வடக்கே லுக்னாக் லா மலை பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் கொண்ட குழு ஒன்று ரோந்து மற்றும் சாலையில் படர்ந்த பனியை அகற்றும் பணியில் ஈடுபட சென்றனர்.

அவர்கள் நேற்று பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபொழுது, திடீரென இந்திய ராணுவ கர்னல் மற்றும் படை வீரர் ஒருவர் என இரண்டு பேர் பனிச்சரிவில் சிக்கி பலியாகினர்.  அவர்கள் கர்னல் ராபர்ட் மற்றும் படை வீரரான சபலா சண்முக ராவ் என தெரிய வந்துள்ளது.

அவர்கள் இருவரையும் மீட்பதற்காக மீட்பு குழு ஒன்றை அமைத்து முயன்றபோதிலும், காப்பாற்ற முடியவில்லை என்று மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Next Story