வெங்காயம், தக்காளி, பருப்புகள், போன்றவற்றின் விலைகளில் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் நீக்கம்- நிதி அமைச்சர்
கால்நடைகளுக்கான நோய் தடுப்பு திட்டத்துக்காக ரூ. 13, 343 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:--
- 1 லட்சம் கோடி ரூபாய் வேளாண் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும்
- மீண்டும் பிரதமரின் கிசன் சம்பட யோஜன திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் துவங்கப்பட உள்ளன
- கடல் சார்ந்த மீன்பிடி நடவடிக்கைகளுக்காக 11,000 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளன
- இதன் காரணமாக ஏராளமானோருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்
- மார்ச் 31ஆம் தேதியுடன் காலாவதியாகும் இறால் பண்ணைகளுக்கான பதிவு 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
- கால்நடைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்த அனைத்து விதமான கால்நடைகளுக்கும் 100% தடுப்பு மருந்து இடப்படும்
- 53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும்
- 5.60 லட்சம் லிட்டர் பால் கூட்டுறவு சங்கங்களால் கொள்முதல் செய்யப்பட்டது - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
- ஒரு நாளைக்கு 560 லட்சம் லிட்டர் பால் சராசரியாக உற்பத்தி செய்யப்படுகிறது
- கால்நடைகளுக்கான நோய் தடுப்பு திட்டத்துக்காக ரூ.13, 343 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பால் உற்பத்தி துறையில் சுமார் 15 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளன.
- மீன் வளத்துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
- மூலிகை பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
- விவசாய பொருட்களை சர்வதேச அளவில் விளம்பர படுத்த ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
- தேனி வளர்ப்பு திட்டங்களை ஊக்குவிப்பதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு.
- புதிய திட்டத்தின் கீழ் 2 லட்சம் தேன் உற்பத்தியாளர்கள் பலன் அடைவார்கள்.
- அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
- தற்போது தக்காளி, வெங்காயம், உருளைக்கு வழங்கப்படும் போக்குவரத்து மானியம் அனைத்து காய்கறிகள் பழங்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது.
- வெங்காயம், பருப்பு வகைகள் போன்றவை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திலிருந்து நீக்கப்படுகின்றன. சில எண்ணெய் வகைகளும் இதில் அடங்கும்.
- மேற்கண்ட இந்த பொருட்கள் இருப்புகளுக்கான அதிகபட்ச வரம்பு தளர்த்தப்படும்.
- இதன் காரணமாக விவசாயிகள் விளை பொருட்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்து லாபம் ஈட்ட முடியும்
- இந்த சட்டம் இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்ட போது பொருட்கள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு வைத்திருப்பதற்காக இயற்றப்பட்டது.
- மாநிலங்களுக்கு இடையேயான விளைபொருட்களின் தடையற்ற வர்த்தகம் நடைபெறும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும்.
- தேசிய பேரிடர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே இந்த பொருட்களில் அதிகபட்ச இருப்புக்கான கட்டுப்பாடு விதிக்கப்படும்.
- வெங்காயம், தக்காளி, பருப்புகள், போன்றவற்றின் விலைகளில் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் நீக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story