யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும்- நிதி அமைச்சர்
யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்தார்.
புதுடெல்லி
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றுசெய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
- பாதுகாப்புத்துறையிலும் தற்சார்பு அடைய வேண்டியது அவசியம்
- சில குறிப்பிட்ட வகையான ஆயுதங்களை இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்படுகிறது
- பெரும்பான்மையான ஆயுதங்களை இந்தியாவிலேயே தயாரிக்க கவனம் செலுத்தப்படும்.
- பயன்படுத்தாமல் உபரியாக உள்ள கனிம வளங்களை விற்பனை செய்ய அனுமதி
- நிலக்கரி சுரங்கங்களை ஏலம் பெற இனி எந்த முன் தகுதியும் தேவையில்லை"
- ஒவ்வொரு கனிமத்தின் இருப்பைக் குறிப்பிட கனிமவளக் குறியீடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன
- ராணுவத் தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் நிறுவனங்களாக மாற்றப்படும்.
- சில தளவாடங்கள் பட்டியலிடப்பட்டு அவை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படும்.
- ராணுவத் தளவாடங்கள் இறக்குமதி மசோதா விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
- ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் நிறுவனங்களாக மாற்றப்படும்.
- வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்பு உதிரிப் பாகங்கள் இனி உள்நாட்டில் தயாரிக்கப்படும்.
- ராணுவ தளவாட உற்பத்தியில் தன்னிறைவை எட்டும் வகையில் மேக் இன் இந்தியா திட்டம் பயன்படுத்தப்படும்.
- சில வெடிபொருள் தொழிற்சாலைகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன
- பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவன மயமாக்கப்படும் - தனியார் மயம் அல்ல
- சாதாரண குடிமகனும் வெடிபொருள் தொழிற்சாலை சார்ந்த பங்குகளை வாங்க முடியும்
- ஆயுதங்களை இறக்குமதி செய்வதால் ஆகும் செலவுகள் இனி மிச்சமாகும்
- இந்தியாவில் மேலும் 6 விமான நிலையங்கள் தனியார், அரசு பங்களிப்புக்காக ஏலம் விடப்படும்
- விமான நிலையங்களை மேம்படுத்துவதற்காக ரூ.2,300 கோடி ஒதுக்கீடு
- இந்திய வான்பரப்பை விமானங்கள் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்
- கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் விமான நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி மிச்சமாகும்
- இந்திய வான்வெளி விமானப் பாதைகள் தொடர்பாக திருத்தங்கள் கொண்டுவரப்படும்
- வான் எல்லையை தாராளமாகப் பயன்படுத்த அனுமதி அளிப்பதன் மூலமாக விமானங்களுக்கு எரிபொருளும், பயண நேரமும் குறையும்
- யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும்.
என்றார்.
Related Tags :
Next Story