இஸ்ரோவின் கட்டமைப்பு வசதிகளை தனியாரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி- நிதி அமைச்சர் அறிவிப்பு


இஸ்ரோவின் கட்டமைப்பு வசதிகளை தனியாரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி- நிதி அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 May 2020 5:25 PM IST (Updated: 16 May 2020 5:25 PM IST)
t-max-icont-min-icon

இஸ்ரோவின் கட்டமைப்பு வசதிகளை தனியாரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் மீட்டெடுக்கும் வகையில், ரூ.20 லட்சம் கோடி மதிப்பலான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். 

அதன்படி, பல்வேறு துறையினருக்குச் சலுகைகள் புதிய திட்டங்களை நிதி அமைச்சர் கடந்த மூன்று தினங்களாக அறிவித்து வருகிறார். 4-வது நாளாக இன்றும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். நிதி அமைச்சர் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
  1. யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் -  நிதியமைச்சர்
  2. மின் விநியோகம் தனியார் மயமாக்கப்படுவதால் சேவை மேம்படும்
  3. மருத்துவமனை, பள்ளிகளைக் கட்டமைப்பதில் தனியார் முதலீடுகளுக்கு ஊக்கம் அளிக்கப்படும்
  4. சமூக கட்டமைப்பு திட்டங்களுக்கு சுமார் ரூ.8,100 கோடி ஒதுக்கப்படும்
  5. விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் பங்களிப்புக்கும் முக்கியத்துவம்
  6. செயற்கைக்கோள் தயாரிப்பு, ஏவுதல் உள்ளிட்டவற்றில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கத் திட்டம்
  7.  இஸ்ரோவின் கட்டமைப்பு வசதிகளைத் தனியாரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி
  8. மருத்துவத்துறையில் பயன்படும் கதிரியக்கத் தனிமங்களைத் தயாரிப்பதில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி
  9. புற்றுநோய் உள்ளிட்ட நோய்களைக் குணப்படுத்துவதில் கதிரியக்கத் தனிமங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
  10. உணவுப் பதப்படுத்தும் துறையில் பயன்படுத்தப்படும் கதிரியக்க ஐசோடோப்புகளை உருவாக்க தனியார் பங்களிப்புக்கு அனுமதி
இவ்வாறு நிதி அமைச்சர் கூறினார்.


Next Story