ஜார்கண்டில் குளிக்க சென்ற 7 வாலிபர்கள் ஆற்றில் மூழ்கி சாவு
ஜார்கண்டில் குளிக்க சென்ற 7 வாலிபர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
ராஞ்சி,
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல பகுதிகளில் வாலிபர்கள் ஒன்றாக கூடி விளையாடியும், உணவு சமைத்து சாப்பிட்டும் ஊரடங்கை கொண்டாடி வருகின்றனர். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ஒன்றாக சேர்ந்து குளிக்க சென்ற நண்பர்கள் 7 பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது.
அம்மாநிலத்தின் கார்வா மாவட்டத்தில் உள்ள டுமார் சோட்டா பகுதியை சேர்ந்த 8 வாலிபர்கள் அங்கு ஓடும் சோன் ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அந்த ஆற்றில் பல இடங்களில் ஆழம் அதிகமாகவும், புதைக்குழியும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கு உற்சாகமாக அவர்கள் குளித்து கொண்டு இருந்தபோது, அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கியதாக தெரிகிறது. இதையடுத்து அவரை காப்பற்ற சென்ற மற்றொரு வாலிபரும் நீரில் மூழ்கினார். இதனால் ஒவ்வொருவராக நண்பர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அடுத்தடுத்து 7 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவரை மட்டும் அப்பகுதியில் நின்றவர்கள் காப்பாற்றினர். பலியான அனைவரும் 22 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றபோது, அந்த பகுதியில் நின்ற மக்கள் அவர்களை எச்சரித்துள்ளனர். ஆனால் அவர்களின் பேச்சுக்கு செவிசாய்க்காமல் அங்கு சென்று குளித்ததால்தான் 7 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story