தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமையாக்குங்கள்- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு


தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமையாக்குங்கள்- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
x
தினத்தந்தி 18 May 2020 12:38 PM IST (Updated: 18 May 2020 12:38 PM IST)
t-max-icont-min-icon

தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க  நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றோடு 55-நாட்கள் ஆகியுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா வைரஸ் கட்டுப்பாடுக்குள் வராததால், ஊரடங்கை மேலும் 14 நாட்கள் நீட்டித்து நேற்று மத்திய அரசு உத்தரவிட்டது.  கொரோனா பரவல் குறைவான இடத்தில் சில தளர்வுகளை விதித்து, வரும் 31-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்க கூடாது என்றும் தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சரவை செயலகம் அறிவுறுத்தி உள்ளது.


Next Story