ஆம்பன் புயலை எதிர்கொள்ள முப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைகள் தயார்; அஜய் பல்லா
ஆம்பன் புயலை எதிர்கொள்ள முப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன என மத்திய உள்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
ஆம்பன் புயலை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த குழுக்கள் மேற்கு வங்காளத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன என மத்திய உள்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார்.
தெற்கு வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, வரும் 20ந்தேதி மாலை மேற்கு வங்காளத்தின் திகா கடற்கரை மற்றும் வங்காளதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை எதிர்கொள்ள மத்திய அரசு தயார் நிலையில் உள்ளது. இதுபற்றி மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, புயல் பாதிப்பு அதிகம் ஏற்பட கூடிய பகுதிகளான மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் தலைமை செயலாளர்களை தொடர்பு கொண்டு பேசினார்.
மேற்கு வங்காளம் அரசின் வேண்டுகோளுக்கு ஏற்ப தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 13 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. 4 குழுக்கள் வழியில் வந்து கொண்டு உள்ளன. 4 குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.
இதனுடன், ராணுவம், விமானம், கடற்படை மற்றும் கடலோர காவல் படையை சேர்ந்த போதிய எண்ணிக்கையிலான குழுக்களும், எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளவும் மற்றும் மாநில அரசுக்கு துணையாக செயல்படவும் தயார் நிலையில் உள்ளன என தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story