மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் போலீசார் 55 பேருக்கு கொரோனா


representative image
x
representative image
தினத்தந்தி 19 May 2020 11:30 AM IST (Updated: 19 May 2020 11:30 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டி எடுத்து வருகிறது. கொரோனாவை தடுக்கும் நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனாலும் நோய் தொற்று கட்டுக்குள் வந்தபாடில்லை. கொரோனா பாதிப்பை குறைக்க கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது.  நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. 

சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலின் படி,  35058 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டியத்தில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மராட்டியத்தில் 55 -பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டியத்தில் இதுவரை 1328 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story