ஊரடங்கு முடியும் வரை சென்னை அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு
ஊரடங்கு முடியும் வரை சென்னை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
சென்னை,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மே 31-வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் ஊரடங்கு முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவித்துள்ளார்.
முதல்வர் உத்தரவின் பேரில் சென்னை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் வேலுமணி அறிவித்தார். ஏற்கனவே சேலம், புதுக்கோட்டை, திருவரூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, கடந்த 17 ஆம் தேதி வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது நினைவு கூரத்தக்கது. அரசின் இந்த அறிவிப்பால், சென்னையில் அம்மா உணவகங்களை நம்பியிருக்கும் ஏழை எளிய மக்கள் பலனடைவார்கள்.
Related Tags :
Next Story