கொரோனா பரவலைக் குறைப்பதில் அமெரிக்கா, இங்கிலாந்தை விட சிறப்பாக செயல்படும் இந்தியா


கொரோனா பரவலைக் குறைப்பதில் அமெரிக்கா, இங்கிலாந்தை விட சிறப்பாக செயல்படும் இந்தியா
x
தினத்தந்தி 19 May 2020 6:26 PM IST (Updated: 19 May 2020 6:26 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவை விட குறைவான நாட்களில் அமெரிக்கா, இங்கிலாந்து, போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்புகள் ஒரு லட்சம் வரை உயர்ந்தன.

புதுடெல்லி

இந்தியாவின் கொரோனா பாதிப்பு வெறும் 64 நாட்களில் 100 முதல் ஒரு லட்சமாக உயர்ந்தது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக அளவீடுகளிலிருந்து பெறப்பட்ட உலகளாவிய புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுகையில், அமெரிக்கா மற்றும் ஸ்பெயினுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் வீதம் நாட்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் மொத்தம் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 1 லட்சத்தை தாண்டியது, அதே நேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,100 ஆக உள்ளது.

ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள், மிக உயர்ந்த சுகாதார வசதிகளைக் கொண்டிருந்தாலும், இந்தியாவை விட குறைவான நாட்களில் 100 முதல் ஒரு லட்சம் பாதிப்புகள் வரை உயர்ந்தன.

எடுத்துக்காட்டாக, வேர்ல்ட்மீட்டர் தரவுகளின்படி, அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகியவை முறையே 25, 30 மற்றும் 35 நாட்களில் ஒரு லட்சம் பாதிப்பை கடந்து உள்ளன

இத்தாலி (36 நாட்கள்), பிரான்ஸ் (9 நாட்கள் ), மற்றும் இங்கிலாந்து  (42நாட்கள் ) கூட ஒரு லட்சத்தை மீறுவதற்கான நாட்களின் எண்ணிக்கையில் இந்தியாவிடம் தோற்றன.

இந்த நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது என்பதையும் இந்தியா , ஒப்பீட்டளவில் குறைவான மேம்பட்ட சுகாதார உள்கட்டமைப்பு இருந்தபோதிலும், இங்கே தொற்று பரவுவதை குறைப்பதில் சிறப்பாக வெற்றி பெற்றுள்ளோம் என்பதை காட்டுகிறது.

இந்தியா மக்கள்தொகையில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாகும். இந்தியா தனது நான்காவது கட்ட கொரோனா வைரஸ் ஊரடங்கை திங்களன்று மே 31 வரை அறிவித்தது. ஊரடங்கு 4.0 தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. மாநிலங்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, கட்டுப்பாடு மற்றும் இடைப்பட்ட மண்டலங்களை வகைப்படுத்தி வரைபடமாக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்துறை அமைச்சகம் (எம்.எச்.ஏ) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்கள் குறிப்பாக தடைசெய்யப்பட்டவை தவிர, பச்சை, ஆரஞ்சு, சிவப்பு மற்றும் இடைப்பட்ட மண்டலங்களில் உள்ள அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளித்துள்ளன. ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் உள்ள முழு அளவிலான தயாரிப்புகளும் இப்போது அனைத்து குடிமக்களுக்கும் கிடைக்கும்.  


Next Story