ஆந்திராவில் ஆகஸ்டு 3 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு
ஆந்திராவில் ஆகஸ்டு 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 4ம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் போது சில தளர்வுகளுடன் பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்வதற்கு, பல்வேறு மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,474 ஆக உள்ளது. பொதுமுடக்கம் காரணமாக, கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் அங்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆந்திர பிரதேசத்தின் முதல்வர் அலுவலகத்தில், பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக இன்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார்.
மேலும், ஆந்திராவில் வணிக வளாகங்கள், திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றைத் திறப்பதற்கான தடை தொடரும் என்றும் கொரோனா தொற்று குறைவாக உள்ள பகுதிகளில், கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story