தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு சொந்தமான இடங்களுக்கு உரிமை கோரும் நேபாளம்- எந்த விலை கொடுத்தாவது மீட்போம் என்கிறது + "||" + Will reclaim at any cost: Nepal PM Oli on contested land

இந்தியாவுக்கு சொந்தமான இடங்களுக்கு உரிமை கோரும் நேபாளம்- எந்த விலை கொடுத்தாவது மீட்போம் என்கிறது

இந்தியாவுக்கு சொந்தமான இடங்களுக்கு உரிமை கோரும் நேபாளம்- எந்த விலை கொடுத்தாவது மீட்போம் என்கிறது
இந்தியாவுக்கு சொந்தமான இடங்களுக்கு நேபாளம் உரிமை கோரி வருவது இருநாடுகளுக்கு இடையேயான உறவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காத்மாண்டு,

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பகுதிகளான  லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கும் நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடத்திற்கு அந்த நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

சீனக் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தின் மானசரோவர் பகுதிக்கு நுழைவாயிலாக இருக்கும் லிபுலேக் கணவாய்க்கு செல்லும் எல்லையோர சாலை ஒன்றை இந்தியா தொடங்கிய 10 நாட்களுக்குப் பின்னர் நேபாள அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த சாலையை இந்தியா திறந்ததற்கு நேபாள வெளியுறவுத்துறை கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. 335 கி.மீ., பரப்புள்ள நிலத்தை இரு நாடுகளும் உரிமை கொண்டாடி, தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இந்த சர்ச்சைக்குரிய நிலங்கள் அடங்கிய, புதிய தேசிய வரைபடத்தை வெளியிட ஒப்புதல் அளிக்கப்பட்டது.  அப்போது அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய நேபாள பிரதமர் ஒலி,  “ ராஜ்ய ரீதியில் அந்தப்பகுதிகளை மீண்டும் பெறும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.  இந்தப்பிரச்சினை ஓயும் வரை மங்கிப்போகாது. இந்த விவகாரத்தில் யார் வருத்தம் அடைந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எந்த விலை கொடுத்தாவது அந்தப்பகுதிகளை மீட்போம்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் 30 குழுக்கள்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று முதன்மை அறிவியல் ஆலோசகர் கே விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
2. "இந்தியாவை தட்டி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" சீனாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் கருத்து
இந்தியாவிற்கும், சீனாவிற்கு இடையே நடக்கும் மோதலால் பெரிய ஆபத்து வரப் போவதாக பாகிஸ்தான் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது.
3. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.51 லட்சமாக உயர்வு: 24 மணி நேரத்தில் 6,387 பேருக்கு தொற்று
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 1.51 லட்சமாக உயர்ந்தது. 24 மணிநேரத்தில் 6,387 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
4. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,45,380 ஆக உயர்வு: பலி எண்ணிக்கை 4,167 ஆனது
இந்தியாவில் தொடர்ந்து 5-வது நாளாக 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆகவும், பலி எண்ணிக்கை 4,167 ஆகவும் உயர்ந்துள்ளது.
5. இந்தியாவில் 2 மாதங்களுக்கு பிறகு விமான போக்குவரத்து தொடங்கியது: 630 விமானங்கள் ரத்தானதால் பயணிகள் அவதி
இந்தியாவில் 2 மாதங்களுக்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நேற்று விமான போக்குவரத்து தொடங்கியது. முதல் நாளிலேயே 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.